Title
stringlengths
21
197
Author
stringlengths
4
27
City
stringlengths
3
20
Published
stringlengths
19
19
Text
stringlengths
149
24k
மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் யார்? - முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ குடும்பத்தினரிடையே கடும் போட்டி
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 10:24:00
மதுரை மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலராகும் முயற்சியில் முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ குடும்பத்தினர் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர். மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. எப்படியாவது கவுன்சிலர் சீட் பெற வேண்டும் என்பதில் வார்டு செயலாளர்கள் உட்பட பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அதேநேரத்தில் மேயர் பதவியை பிடிப்பதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர், திமுக எம்எல்ஏ குடும்பத்தினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: மேயர் தேர்வு மறைமுகத் தேர்தல் மூலமே நடக்க உள்ளது. மதுரை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நிலையில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மேயராக முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்கள் குடும்பப் பெண்களை கவுன்சிலராக்கி மேயராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதில் மதுரை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் பொன்.முத்துராமலிங்கம். இவர் தனக்கு அல்லது மகன் பொன்.சேதுவுக்காக கடந்த சட்டப் பேரவை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டார். ஆனால் தெற்கு மாவட்டச் செயலாளரான கோ.தளபதி வடக்கு தொகுதியில் சீட் பெற்று வெற்றி பெற்றார். இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு பணியாற்றி, தளபதியை வெற்றிபெறச் செய்ததால், மேயர் பதவியை தனது மருமகள் மோஸ்னிக்கு தர வேண்டும் எனக் கேட்கிறார் பொன்.முத்து ராமலிங்கம். மோஸ்னி வார்டு 32-ல் (சொக்கிகுளம்) போட்டியிட சீட் கேட்டுள்ளார். கோ.தளபதியின் மகள் மேகலா சீட் கேட்டு வார்டு 98-ல் (திருப்பரங்குன்றம்) மனு அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மேயர் தேர்தல் நடத்த திட்டமிட்டபோது வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் திமுக சார்பில் தனது மகள் மட்டுமே தைரியமாக மனு அளித்தார். ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், தேர்தல் நேரத்தில் பொன்.முத்துராமலிங்கத்துக்காக வடக்கு மாவட்டத்தை விட்டுக் கொடுத்ததாகவும், அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், அதை ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் தனது மகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என தலைமையிடம் தளபதி கேட்டு வருகிறார். பொன்.முத்துராமலிங்கம் விரும்பினால் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை தரலாம் எனத் தெரிவித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர் களுடன் ஆனையூர் பகுதிச் செயலாளர் பொம்மத்தேவன் மகள் ரோகிணி (வார்டு 17), நாராயணபுரம் வார்டு செயலாளர் சசிக்குமார் மனைவி வாசுகி (வார்டு 5) ஆகியோர் தரப்பிலும் முயற்சி செய்து வருகின்றனர். இது தவிர முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த சின்னம்மாள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நம்பிக்கையோடு உள்ளனர். 2 மாவட்டச் செயலாளர்கள் குடும்பத்தினர் கடும் போட்டியில் உள்ள நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணி மாறன் ஆகியோரிடம் 29 வார்டுகள் உள்ளன. மாநகரில் உள்ள மத்திய தொகுதியில் வென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர்கள் அளிக் கும் ஆதரவை பொருத்து மேயர் வேட்பாளர் யார் என்பது தெரியும். பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகியோருக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், சாதாரண கட்சி நிர்வாகி ஒருவரை மேயராக்கும் மறைமுகத் திட்டமும் உள்ளதாக தகவல் பரவுகிறது. மேயர் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறப்போவது யார் என்பதே தற்போது மதுரை திமுகவினரின் முக்கிய விவாதமாக உள்ளது. நேரடித் தேர்தல் என்றால் இந்த அளவு குழப்பம் இருந்திருக்காது என்றனர்.
சிவகாசி அருகே துணைத் தலைவர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறி பொறுப்புகளை திரும்ப ஒப்படைத்த பெண் ஊராட்சி தலைவர்
செய்திப்பிரிவு
கூறப்பட்டுள்ளதாவது
2022-01-01 10:21:00
சிவகாசி அருகே ஊராட்சி நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காத துணைத் தலைவரால், தனது பொறுப்புகளை உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார் ஊராட்சி பெண் தலைவர். சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் காளீஸ்வரி. இவர், பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவராக உள்ளார். நேற்று காலை விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பாஜகவினருடன் காளீஸ்வரி சென்றார். அங்கு உதவி இயக்குநர் (பொறுப்பு) அரவிந்த்திடம் தனது பொறுப்புகளை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி காளீஸ்வரி கடிதம் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: புதுக்கோட்டை ஊராட்சியின் துணைத் தலைவர் சேத்தூரான். இவர் ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார். ஊராட்சிக் கூட்டங்களில் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திடுகிறார். தீர்மானங்களை நிறைவேற்று வதற்கான ஆவணத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்கிறார். ஊராட்சி நிர்வாகம் மேற் கொள்ளும் செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மறுக்கிறார். ஊராட்சியால் மேற் கொள்ளப்படும் பணிகளுக்கு கமி ஷன் கேட்கிறார். இதன் காரணமாக கடந்த 9 மாதங்களாக மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க சொந்த பணத்தை செலவிட்டு வருகிறேன். தெருவிளக்கு, குடிநீர் மின் மோட்டார்கள் பழுதை சரி செய் யவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் போதிய நிதி ஆதாரம் இல்லை. நிர்வாகத்துக்கு துணைத் தலை வரின் ஒத்துழைப்பும் இல்லை. அதனால், எனது பொறுப்புகளை ஒப்படைப்பு செய்கிறேன். இவ் வாறு அக்கடிதத்தில் காளீஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் திடீரென பெய்த கனமழையால் பல மணி நேரம் ஸ்தம்பித்த வாகனங்கள்: போக்குவரத்து மேலாண்மை, பேரிடர் கால திட்டங்கள் அவசியம் - பிற நகரங்களிலும் வசதிகளை பரவலாக்க வல்லுநர்கள் வலியுறுத்தல்
கி.ஜெயப்பிரகாஷ்
கூறியதாவது
2022-01-01 08:30:00
சென்னை சென்னையில் திடீரென பெய்த அதீத கனமழையால் பல மணிநேரமாக போக்குவரத்து முடங்கியது. இதுபோன்ற பாதிப்புகளை சமாளிக்க தொலைநோக்குடன் கூடிய பேரிடர் கால திட்டங்களோடு, மெட்ரோ, ரயில்வே திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்று போக்குவரத்து பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஆண்டுதோறும் கனமழை பெய்வதும், ஏரிபோல மழைநீர் தேங்குவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் திடீரென பெய்த அதீத கனமழையால், மாநகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பேருந்துகளின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருந்த மக்களும் சாலைகளிலேயே பல மணி நேரம் முடங்கினர். இரவு 10 மணிக்கு பிறகே வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கின. இதனால், மக்கள் வீடு திரும்ப நள்ளிரவானது. அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் வசதி இருந்ததால், பலரும் வீடு திரும்பினர்.நேற்று முன்தினம் மட்டும் 1.83லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னையில் மழை பாதிப்பு வழக்கமாகி வரும் நிலையில், இனிவரும் பேரிடர் பாதிப்புகளை சமாளிக்க, சென்னை போன்ற பெரிய நகரங்களில் புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தால் அதீத வானிலை மாற்றங்களை தவிர்க்க முடியாத சூழலில் இருக்கிறோம். இருப்பினும், அதற்கேற்ப ஆக்கப்பூர்வமான நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, அதன் பாதிப்புகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பேரிடர்கால திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். சாலைகளின் தன்மை என்ன, வழக்கமான நாட்களில் எவ்வளவு வாகனங்கள் செல்ல முடியும், கனமழை காலத்தில் எவ்வளவு வாகனங்களை இயக்க முடியும்என்பது போன்ற தகவல்களை அறிவது அவசியம். பேரிடர், இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து மக்களைவெளியே வராத வகையில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இதற்கான நவீன தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்கள், கார்போன்ற தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, சென்னை மாநகரின் உள்பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டங்களையும், புறநகர் பகுதிகளில் கூடுதல் மின்சார ரயில்களின் சேவையையும், புதிதாக ‘லைட் மெட்ரோ ரயில்’ போன்றதிட்டங்களையும் செயல்படுத்தலாம். சென்னை - மாமல்லபுரம் தடத்திலும் மின்சார ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம். பேருந்துகள் மட்டுமே செல்லும் பிரத்யேக வழித்தடங்களை அமைத்தால், இக்கட்டான நேரத்திலும் நெரிசல் இன்றி விரைவாக செல்லலாம். தொலைநோக்கு பார்வையுடன் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அண்ணா பல்கலைக்கழக நகர்ப்புற மேம்பாட்டு பொறியியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 75 சதவீதத்தினர் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மக்கள்தொகை அதிகரிப்பதால் அடிப்படை வசதிக்கான தேவையும் பல மடங்கு அதிகரிக்கிறது. சென்னையில் அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கையை ஒப்பிடும்போது, சாலை பணிகளின் விரிவாக்கம் குறைவு. பல்வேறு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும். மேலும், சென்னைபோல கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை போன்ற நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தொழில், சுகாதார வசதி, கல்வி நிறுவனங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் மட்டுமே சென்னையில் மக்கள் குவிவதை கட்டுப்படுத்த முடியும். சென்னையில் குவியும் மக்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்தாலே, பேரிடர் கால பாதிப்புகளில் இருந்து மக்களைஎளிதாக காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். பிஆர்டிஎஸ் திட்டம் ஏன் சிறந்தது? பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவாக பயணம் மேற்கொள்ளும் வகையில் ‘பிஆர்டிஎஸ் திட்டம்’ (Bus Rapid Transit System) செயல்படுத்தப்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கு என பிரத்யேக சாலை அமைத்து, சாலைகளின் நடுப்பகுதியில் பேருந்து நிறுத்தங்கள் அமைத்து இயக்கப்படும். அகமதாபாத், இந்தூர் உள்ளிட்ட சில பெரிய நகரங்களில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள்இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை. ஒரு கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க ரூ.150 கோடி வரையிலும், மெட்ரோ ரயில் லைட் பாதை அமைக்க ரூ.40 கோடி வரையிலும் செலவாகும். ஆனால், பிஆர்டிஎஸ் திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீ.க்கு ரூ.10 கோடி வரை மட்டுமே செலவாகும். இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் அதிக மக்கள் பயன்படுத்தக்கூடிய, குறைந்த செலவிலான பிஆர்டிஎஸ் திட்டத்தை அதிக அளவில் செயல்படுத்தலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பிரதாய அரசியலை செய்து கொண்டிருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சி அடையாது: கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 08:20:00
காரைக்குடி தமிழகத்தில் சம்பிரதாய அரசியலை செய்து கொண்டிருந்தால் காங்கிரஸ் வளர்ச்சி அடையாது என கார்த்தி சிதம்பரம் எம்பிதெரிவித்தார். இதுகுறித்துஅவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தில் நடைபெற்ற நகர்ப்புறத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2023-ம்ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ்ஆட்சி அமைக்கும். அடுத்த 30 ஆண்டுகள் இந்திய அரசியலுக்கு மையமாக பாஜக இருக்கும் என்று பிரசாந்த்கிஷோர் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தில் குழந்தைகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்த புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் சாமியாராக வேண்டுமென விரும்பினால் அதற்கான உரிமையை அனைத்து மதத்திலும் கொடுக்க வேண்டும். 5 மாநில சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சவால்கள்,கட்சிக்குள் போட்டிகள் உள்ளன.உ.பி.யில் காங்கிரஸ் கட்சி கட்டுமானம் வலிமையாக இல்லை.இருப்பினும் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் கொடுப்போம் எனப் பிரியங்கா புது முயற்சி எடுத்திருக்கிறார். இதற்கு எதிர்காலத்தில் பலன் உண்டு. தமிழகத்தில் சம்பிரதாய சடங்குஅரசியலை காங்கிரஸ் கட்சிசெய்து கொண்டிருந்தால் வளர்ச்சி பெறாது. மக்கள் மனநிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய சிந்தனை வேண்டும். அதிமுக ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. முன்னாள் அமைச்சரை காவல் துறை இன்னும் தேடுவதுவியப்பாக உள்ளது. தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு திட்டம் கொண்டு வர வேண்டும்.
ஜவுளித் துறைக்கான வரியை5 சதவீதமாகவே வைத்திருக்க வேண்டும்: ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
பேசியதாவது
2022-01-01 08:09:00
கரோனா பெருந்தொற்றில் இருந்துமீண்டு வரும் நிலையில், ஜவுளித் துறைக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாகவே வைத்திருக்க வேண்டும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார். ஜவுளித் துறைக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி)5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக விவாதிக்க, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நேரடி வரி மற்றும் மறைமுக வரி வசூலிப்பதற்கு மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு என்பது நியாயமற்றதாக உள்ளது. மாநிலத்தின் நேரடி வரிவிதிப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு, மறைமுக வரிவிதிப்புக்கான அதிகாரமும் பெரும் பகுதி குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமாவதற்கு முன்னர் மதிப்பு கூட்டு வரி தமிழகத்தில் இருந்தபோது, ஜவுளித் துறைக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆயத்த ஆடைகளுக்கு மட்டும் 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. தற்போது, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜவுளித் துறை மீண்டு சகஜ நிலைக்கு வரும் சூழலில், இந்த ஜிஎஸ்டி உயர்வு பரிந்துரை பொருத்தமற்றதாக உள்ளது. ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டால், அரசால் மானியம் வழங்க இயலாது. மேலும், கூடுதல் கடன்கள் மற்றும்செயல்பாட்டு மூலதனம் கிடைக்காத நிலையில், ஜிஎஸ்டி உயர்வு வேலையிழப்பை அதிக அளவில் ஏற்படுத்தும் என்று ஜவுளித் துறை சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனவே, ஜவுளித் தொழிலுக்கான ஜிஎஸ்டி உயர்வை திரும்ப பெற வேண்டும். அதற்குப் பதில், ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம் மதிப்புக்கு மேல் உள்ள ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதமும், அதற்கு குறைவான ஆடைகளுக்கு ரூ.5 சதவீதமும் வரி விதிக்கலாம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர்; திமுகவின் தொண்டர் படையாக காவல் துறை மாறிவிட்டது: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக புகார்
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 08:06:00
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறை திமுகவின்தொண்டர் படையாக மாறிவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சட்டக்குழு புகார் அளித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக சட்டப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் இன்பதுரை, பாபு முருகவேல் உள்ளிட்டோர் சந்தித்து தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் அதிமுகவினர் மீதான வழக்குகள் குறித்து மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது குறித்தும் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக அரசின் அச்சுறுத்தல், அழுத்தம் காரணமாக ஐஎப்எஸ்அதிகாரி முதல் உதவி ஆய்வாளர்கள் வரை தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது. காவல் துறை அழிந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால், வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. நீதிமன்றத்தில் வழக்குகளை நேர்மையாக சந்திப்போம். தற்போது, வழக்கு என்ற போர்வையில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை, அதாவதுமினி எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று ராஜேந்திர பாலாஜி,நாளை நாங்கள், எதிர்காலத்தில் அனைவருக்கும் இந்த நிலை வரலாம். திமுக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ராஜேந்திரபாலாஜி மீதானஅதே வழக்குதான் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் உள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியுமா. ஜோலார்பேட்டையில் அதிமுகவை சேர்ந்த இருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பழகன் உதவியாளர் என 3 பேர் விருதுநகர் காவல் துறையினரால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 4 நாட்களாக எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன்தான் பொறுப்பு. எங்கு பார்த்தாலும் போதை மருந்து, போதை விற்பனை நடைபெறுவதாக டிஜிபியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆளுங்கட்சினர் ஆதரவுடன் சூதாட்ட கிளப், கள்ள லாட்டரி நடத்தப்படுகிறது. கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண் குழந்தைகள் பாலியல் வழக்கு, பாலியல்கொலைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அரசு ஊழியர்களாக இருந்த வெங்கடாசலம், ராதாபுரம் உதவி பொறியாளர் தற்கொலை வழக்குகளை சிபிஐக்கு மாற்றவேண்டும். கடந்த 7 மாதங்களில் அதிக அளவில் சொத்துக் குவிப்பு, வசூல்வேட்டை என புகார் வருகிறது. நிர்வாகம் முதல்வர் ஸ்டாலின் கையில் உள்ளதா என சந்தேகம் எழுகிறது. நீட் தேர்வு தொடர்பான மசோதா ஆளுநரிடம் உள்ளது. நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. அதை மாற்ற வேண்டுமானால் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மாற்ற வேண்டும். இதை விடுத்து, மசோதாநிறைவேற்றி அனுப்புவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருக்குவளை தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமானதா? தஞ்சாவூரில் ரூ.500 கோடி மரகத லிங்கம் மீட்பு: வங்கி லாக்கரில் வைத்திருந்த தந்தை, மகனிடம் விசாரணை
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 08:02:00
சென்னை தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மரகத லிங்கம் திருக்குவளையில் உள்ளதியாகராஜர் கோயிலுக்கு சொந்தமானதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர், சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவுதலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் அருளானந்த நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் சிலை பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக ரகசியதகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று, அங்கிருந்த என்.எஸ்.அருண பாஸ்கர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனது தந்தைசாமியப்பன் வசம், தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்போது வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த சிலை அவரது தந்தையிடம் எப்படி வந்தது என்று கேட்டபோது, அதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, அந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை, வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து எங்களிடம் ஒப்படைத்தார். அதை, அங்கீகாரம் பெற்ற மரகதக்கல் மதிப்பீட்டாளர்களிடம் காண்பித்தபோது அதன் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிவித்தனர். 2016-ல் மாயமான லிங்கமா? இதற்கிடையே, கடந்த 2016 அக்.9-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜர் கோயிலில் இருந்து மரகதலிங்கம் கொள்ளை போனது தொடர்பாக தருமபுர ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர் சவுரிராஜன் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில், தற்போது மீீட்கப்பட்டுள்ள மரகத லிங்கச் சிலை, கொள்ளை போன சிலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை வைத்திருந்த சாமியப்பன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம்அடைந்தவுடன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்புவோம். விசாரணை முடிந்த பிறகு, குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். சாமியப்பனிடம் சிலை எப்படி வந்தது, சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இது, சோழ மன்னர்கள் கம்போடியா போருக்கு சென்று வெற்றிபெற்று, அங்கிருந்து கொண்டு வந்த சிலையாக இருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மரகத லிங்கத்தை மீட்ட தனிப்படை போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.
19-வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: 53 நாடுகளின் 100 படங்கள் திரையிடப்படுகின்றன
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 08:00:00
சென்னை சென்னையில் 19-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வரும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் திரைப்பட விழா இயக்குநருமான இ.தங்கராஜ் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளில் 53 உலக நாடுகளிலிருந்து வெளியான 100 படங்கள் 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இவற்றில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட ஈரான் நாட்டின் ‘ஹீரோ’ (A Hero), ஆஸ்திரேலியாவின் ‘வென் பொமேகிரேனட்ஸ் ஹவுல்' (When Pomegranates Howl), இந்தோனேசியாவின் 'யுனி' (Yuni), தென் கொரியாவின் 'டேக்ஸி டிரைவர்’ உள்ளிட்ட படங்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன. திரையிடப்படும் இந்தியப் படங்களில், தமிழ்ப் படங்கள்: உடன்பிறப்பே, கர்ணன், தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க. மலையாளப் படங்கள்: காக்கத்துருத்து, நாயாட்டு, நிறைய தத்தகளுள்ள மரம், சன்னி. பிறமொழி இந்தியப் படங்கள்: 21-ஸ்ட் டிஃபன் - குஜராத்தி, டொல்லு - கன்னடம், ஃபனரல் - மராத்தி, கல்கொக்கோ - பெங்காலி, நாட்யம் - தெலுங்கு, நிவாஸ் - மராத்தி, கிலியு பஞ்சரதொலில்லா – கன்னடம், செம்கோர் - திமாசா, அன்ஹெர்ட் - தெலுங்கு, வர்துல் - மராத்தி. சென்னை பிவிஆர் மல்டிபிளெக்ஸ், சத்யம் சினிமாஸ், சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ் திரையரங்குகளில் இவை திரையிடப்படுகின்றன. இவ்வாறு இ.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
டெங்கு, தண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுக்க வேண்டும்: மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 07:55:00
தமிழகத்தில் மழைக்குப் பின்னர் டெங்கு மற்றும் தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பருவமழைக்கு முன்பும், மழை பெய்யும்போதும், மழைக்குப் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே சுகாதாரத் துறை, அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் தலைமையில் தனித்தனியே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பது, மருத்துவ முகாம்கள் நடத்துவது, மக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரில் உரிய அளவு குளோரின் கலந்து, பாதுகாப்பான நீரை வழங்குவதை உறுதிசெய்வது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். தண்ணீரில் ஏற்படும் மாசுபாட்டால் வயிற்றுப்போக்கு, கணைய அழற்சி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பணியை முறையாக கண்காணிக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளும் மழைக்குப் பிறகு ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக் காலங்களில் நுரையீரல் சார்ந்த நோய்களும், சேற்றுப் புண்களும் ஏற்படக்கூடும். தரமற்ற உணவுகளால் உடல் உபாதைகள் வருவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, அவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரிவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் வாகன சோதனை: மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 07:34:00
மாமல்லபுரம் மற்றும் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் போலீஸாரின் கடும் வாகன சோதனைகளுக்கு பிறகே நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் உள்ள சொகுசு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், எஸ்பி.அரவிந்தன் தலைமையில், மாமல்லபுரம் டிஎஸ்பி.ஜகதீஸ்வரன், 8 ஆய்வாளர்கள், 200 போலீஸார் முட்டுக்காடு, நாவலூர், திருப்போரூர், மாமல்லபுரம் நகர எல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், பண்ணை வீடுகள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்த நபர்களை மட்டுமே நகருக்குள் செல்ல போலீஸார் அனுமதித்தனர். மேலும், மாமல்லபுரம் நகர எல்லையில் சாலையில் தடுப்புகள் அமைத்து வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அத்தியாவசிய தேவைக்காகச் சென்ற உள்ளூர் மக்களை மட்டும் விசாரித்து அனுமதித்தனர். மேலும், முட்டுக்காடு பகுதியில் பிற்பகல் முதலே சென்னையில் இருந்து மோட்டார் சைக்களில் ஈசிஆர் சாலையில் வந்த இளைஞர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும், திருப்போரூர் பகுதியில் உள்ள ஓஎம்ஆர் சாலையிலும் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.\ கேக் வெட்டி கொண்டாட்டம் இதனால், கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரை பகுதிகளில் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சொகுசு விடுதிகளில் தங்கியிருந்த நபர்கள் விடுதிகளுக்குள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், புத்தாண்டு நாளான இன்றும் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தொற்று அச்சத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மட்டுமே அமல்படுத்தியுள்ளோம். புத்தாண்டு நாளில் மாமல்லபுரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவர் என்பதால், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள நபர்களும் கடற்கரைக்குச் செல்லக் கூடாது என விடுதி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தடையை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றை தடுப்பதற்காக போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
சென்னையில் அடுத்த மழை காலத்துக்குள் பில்லர் பெட்டிகள் ஒரு மீட்டர் உயர்த்தப்படும்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 07:23:00
சென்னை அடுத்த மழைக்காலத்துக்குள், சென்னை மாநகராட்சியில் உள்ள பில்லர் பெட்டிகள் ஒரு மீட்டர் உயர்த்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தபோது, மின் தடைபுகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் திடீரென பெய்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால், 32 பீடர்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மின்வாரியம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளால், 23 பீடர்களில் மின்விநியோகம் வழங்கப்பட்டது. மின்விநியோகம் தொடர்பாக வரும் புகார்கள் மீது விரைவாகநடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்குவதற்காக 1,000 களப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்விபத்தால் 3 பேர் உயிர்இழந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வரப்படுகிறது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பில்லர் பெட்டிகளை உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. அடுத்த மழைக் காலத்துக்கு முன்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பில்லர் பெட்டிகளும் ஒரு மீட்டர் உயர்த்தப்படும். இதனால், மழைநீர் சூழ்ந்தாலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: பல்கலை.களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
செய்திப்பிரிவு
சுற்றறிக்கை
2022-01-01 07:07:00
ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்கலை. துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் சம்பவங்களை தடுக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகள் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சில பரிந்துரைகளை யுஜிசிமுன்வைக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, ராக்கிங் தடுப்பு குழு, தடுப்பு படை, தடுப்பு பிரிவு போன்றவற்றை ஏற்படுத்தி அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ராக்கிங் சம்பவங்கள் மற்றும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாணவர் சேர்க்கை கையேடுகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும். ராக்கிங்தடுப்பு குழு தொடர்பான விவரங்களை கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.ராக்கிங் சம்பவம் நிகழாமல் தடுக்கும் வகையில், அந்த மனநிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். ராக்கிங் மற்றும் இதர விரும்பத்தகாத நிகழ்வுகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் விடுதி, கேண்டீன், ஓய்வு இல்லத்தில் திடீர் ஆய்வுநடத்த வேண்டும். ராக்கிங் சம்பவங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும்.
ஜன.29 முதல் பிப்.6 வரை நடக்கிறது; முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: கால அட்டவணை 15 நாளுக்கு முன் வெளியாகும்
செய்திப்பிரிவு
கூறியிருப்பதாவது
2022-01-01 07:03:00
சென்னை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இணையவழி தேர்வு,ஜன.29 முதல் பிப்.6 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்தேர்வு வாரியத் தலைவர் ஜி.லதாநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், கடந்த செப்.18 முதல் நவ.14 வரை பெறப் பட்டன. அந்த நேரத்தில் கணினிவழி தேர்வு தேதி அறிவிக்கப் படவில்லை. தற்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினிவழி தேர்வை ஜன.29 முதல் பிப்.6-ம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது. விரிவான தேர்வு காலஅட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பாக வெளியிடப் படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்து.
சென்னை, புறநகர், டெல்டா உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்திப்பிரிவு
கூறியதாவது
2022-01-01 06:55:00
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜன.1-ம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 2-ம் தேதி (நாளை) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 3-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 4-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மெரினா டிஜிபி அலுவலகத்தில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஓராண்டில் வழக்கமாக 93 செ.மீ. மழை பெய்ய வேண்டும். 2021-ம் ஆண்டில் 137 செ.மீ.மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 47 சதவீதம் அதிகம். சென்னையில் வழக்கமாக 133 செ.மீ. மழை கிடைக்கும். 2021-ல் 210 செ.மீ. கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 58 சதவீதம் அதிகம். கடந்த 2015-ல் 205 செ.மீ. மழை கிடைத்தது. தமிழகத்துக்கு டிசம்பரில் 9 செ.மீ. மழை கிடைக்க வேண்டும். ஆனால் 6 செ.மீ. மட்டுமே கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 35 சதவீதம் குறைவு. சென்னையில் டிசம்பர் மாதத்தில் 16 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், கடந்தடிசம்பரில் 21 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 29 சதவீதம் அதிகம். கடந்த 2015-ல் சென்னையில் 44 செ.மீ. மழை பெய்தது. இது வழக்கத்தைவிட 184 சதவீதம் அதிகம். மீனவர்களுக்கான எச்சரிக்கை குமரிக்கடல் பகுதிகளில் ஜன.1-ம் தேதி (இன்று) மணிக்கு 35 - 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். 2, 3, 4-ம் தேதிகளில் 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார்: பிரதமர் மோடி ஜன.12-ல் மதுரை வருகை- பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்
செய்திப்பிரிவு
கூறியிருப்பதாவது
2022-01-01 06:53:00
ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பாஜக சார்பில் ஜனவரி 12-ம் தேதி ‘மோடி பொங்கல்' விழா மதுரையில்நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா,மாநிலச் செயலாளர் உமாரதி, மகளிரணி மாநிலத் தலைவர் மீனாட்சி, எஸ்.சி. அணி மாநிலத் தலைவர் பொன்.பாலகணபதி,தேசிய பொதுக்குழு உறுப்பினர் நீலமுரளி யாதவ், மாவட்டத் தலைவர்கள் மகா சுசீந்திரன், டாக்டர் சரவணன், மேப்பல் சக்திவேல், பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டப் பார்வையாளர் நாகேந்திரன், மகளிரணி மாநிலச் செயலாளர் கவிதாகாந்த் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர 6 பேர் கொண்ட வரவேற்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம்தமிழகத்துக்கு கூடுதலாக 1,450இடங்கள் கிடைக்கவுள்ளன. ஜனவரி 12-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் 11 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர்நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கல் வைப்பதற்கும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மதுரை பொங்கல் விழாவில் வேட்டி, சட்டை, துண்டு அணிந்துமோடி பங்கேற்க இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். மதுரை பொங்கல் விழாவில் பங்கேற்கும் மோடி, தமிழில் சில நிமிடங்கள் பேச இருப்பதாகவும், அதற்காக அவர் பயிற்சி எடுத்து வருவதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி14-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபங்கேற்றார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்; புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
அ.முன்னடியான்
புதுச்சேரி
2021-12-31 21:04:00
புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா, ஒமைக்ரான் காரணமாக புத்தாண்டு கெண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அரசு அனுமதி வழங்கியது. இதனால் புதுச்சேரியில் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது. ஓட்டல்கள், விடுதிகளில் அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பின. பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநில எல்லைகளான கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம் ஆகிய எல்லைகளுக்குள் நுழையும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அனைத்து வாகனங்களையும் காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றின் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் நிறுத்தி தடுப்பூசி சோதனைகளை மேற்கொள்கிறன. அப்போது, ஓட்டுநர், சுற்றுலாப் பயணிகளின் சான்றிதழ்களை வாங்கி சரிபார்த்து, தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதித்தனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மாநில எல்லைகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்று பிற்பகலில் இருந்து நாளை காலை வரை கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்ட கடற்கரை சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று பிற்பகல் முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரத்தொடங்கினர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே கடற்கரைக்கு வருகின்றனர். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். கடற்கரை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சட்டம் ஒழுங்கு போலீஸார், போக்குவரத்து போலீஸார், ஐஆர்பிஎன், ஊர்க்காவல் படையினர் என சுமார் 2000 போலீஸார், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் பாதுகாப்பு பாணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளால் அமைக்கப்பட்ட குழுக்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நின்று, முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கின்றனர். தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகையால் நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழையால் சுற்றுலா பயணிகள் அவதி: புதுச்சேரியில் நேற்று லேசான மழை பெய்தது. இதனால் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை லேசான மழை பெய்தது. பிற்பகலில் விட்ட மழை மாலையில் பெய்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்து அவதியடைந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கு விரைந்தனர். புத்தாண்டு விழாவுக்காக விற்பனைக்கு பொருட்களுடன் திரண்டிருந்த தெருவோர வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். மழையுடன் கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்து, கடற்கரையில் இறங்கியோரை போலீஸார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை துப்பாக்கிச் சூடு: சிஐஎஸ்எஃப் அலுவலர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை; சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
கே.சுரேஷ்
புதுக்கோட்டை
2021-12-31 20:52:00
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை துப்பாக்கி சூட்டில் சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை அலுவலர்களுடன் கோட்டாட்சியர் இன்று (டிச.31) விசாரணை நடத்தினார். நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் நேற்று சுமார் 34 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், உறவினர் வீட்டின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த கொத்தமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தியின்(11) தலைக்குள் பாய்ந்தது. படுகாயம் அடைந்த நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட புகழேந்திக்கு தலைக்குள் இருந்த குண்டு 4 மணிநேர அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.அதன்பிறகும், சுயநினைவின்றி புகழேந்தி இருந்து வருவதாலும், மூளை நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும், பிற உறுப்புகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில்,துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மீது கீரனூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை துணை காமாண்டர் நோயல், ஆய்வாளர் சிதம்பரம் ஆகியோரிடம் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி இன்று இரவு விசாரணை மேற்கொண்டார். அப்போது, பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் ரகம், குண்டுகள் மற்றும் குண்டுகள் கடந்து செல்லும் தூரம் குறித்து விளக்கினர். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் சிவசுப்பிரமணியன், பஸினாபீவி, அஸ்வினி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அருகே உள்ள மலைப்பகுதி, சிறுவன் பாதிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட இடங்களை கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் உடனிருந்தார்.
டிசம்பர் 31- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 20:46:00
சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,48,045 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 16950 16678 7 265 2 செங்கல்பட்டு 175534 172333 654 2547 3 சென்னை 562990 551935 2403 8652 4 கோயம்புத்தூர் 253369 249950 904 2515 5 கடலூர் 64599 63637 86 876 6 தருமபுரி 29001 28663 57 281 7 திண்டுக்கல் 33346 32658 36 652 8 ஈரோடு 107759 106622 426 711 9 கள்ளக்குறிச்சி 31619 31384 25 210 10 காஞ்சிபுரம் 76171 74693 210 1268 11 கன்னியாகுமரி 63143 61949 132 1062 12 கரூர் 24984 24518 102 364 13 கிருஷ்ணகிரி 44109 43690 61 358 14 மதுரை 75693 74441 65 1187 15 மயிலாடுதுறை 23432 23106 7 319 16 நாகப்பட்டினம் 21426 21049 16 361 17 நாமக்கல் 54559 53787 255 517 18 நீலகிரி 34433 34144 70 219 19 பெரம்பலூர் 12148 11880 23 245 20 புதுக்கோட்டை 30385 29950 14 421 21 இராமநாதபுரம் 20687 20302 26 359 22 ராணிப்பேட்டை 43709 42879 51 779 23 சேலம் 102501 100466 306 1729 24 சிவகங்கை 20517 20259 45 213 25 தென்காசி 27420 26924 10 486 26 தஞ்சாவூர் 76455 75338 110 1007 27 தேனி 43625 43097 5 523 28 திருப்பத்தூர் 29476 28821 28 627 29 திருவள்ளூர் 120900 118790 248 1862 30 திருவண்ணாமலை 55359 54645 41 673 31 திருவாரூர் 42031 41519 50 462 32 தூத்துக்குடி 56645 56138 95 412 33 திருநெல்வேலி 49794 49298 60 436 34 திருப்பூர் 98631 97181 424 1026 35 திருச்சி 78890 77665 123 1102 36 வேலூர் 50514 49240 133 1141 37 விழுப்புரம் 46122 45724 40 358 38 விருதுநகர் 46483 45873 61 549 39 1120 1061 58 1 40 1088 1084 3 1 41 428 428 0 0 மொத்தம் 27,48,045 27,03,799 7,470 36,776
டிசம்பர் 31: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 20:41:00
சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,48,045 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: மாவட்டம் மொத்தம் 1 அரியலூர் 16930 0 20 0 16950 2 செங்கல்பட்டு 175392 137 5 0 175534 3 சென்னை 562354 589 47 0 562990 4 கோயம்புத்தூர் 253248 70 51 0 253369 5 கடலூர் 64395 1 203 0 64599 6 தருமபுரி 28777 8 216 0 29001 7 திண்டுக்கல் 33268 1 77 0 33346 8 ஈரோடு 107643 22 94 0 107759 9 கள்ளக்குறிச்சி 31211 4 404 0 31619 10 காஞ்சிபுரம் 76133 34 4 0 76171 11 கன்னியாகுமரி 63010 9 124 0 63143 12 கரூர் 24933 4 47 0 24984 13 கிருஷ்ணகிரி 43868 3 238 0 44109 14 மதுரை 75511 9 173 0 75693 15 மயிலாடுதுறை 23393 0 39 0 23432 16 நாகப்பட்டினம் 21372 1 53 0 21426 17 நாமக்கல் 54429 18 112 0 54559 18 நீலகிரி 34387 2 44 0 34433 19 பெரம்பலூர் 12142 3 3 0 12148 20 புதுக்கோட்டை 30349 1 35 0 30385 21 இராமநாதபுரம் 20547 5 135 0 20687 22 ராணிப்பேட்டை 43646 14 49 0 43709 23 சேலம் 102038 25 438 0 102501 24 சிவகங்கை 20405 4 108 0 20517 25 தென்காசி 27361 1 58 0 27420 26 தஞ்சாவூர் 76425 8 22 0 76455 27 தேனி 43579 1 45 0 43625 28 திருப்பத்தூர் 29356 2 118 0 29476 29 திருவள்ளூர் 120847 43 10 0 120900 30 திருவண்ணாமலை 54958 2 399 0 55359 31 திருவாரூர் 41990 3 38 0 42031 32 தூத்துக்குடி 56340 30 275 0 56645 33 திருநெல்வேலி 49358 9 427 0 49794 34 திருப்பூர் 98577 43 11 0 98631 35 திருச்சி 78817 8 65 0 78890 36 வேலூர் 48786 13 1714 1 50514 37 விழுப்புரம் 45945 3 174 0 46122 38 விருதுநகர் 46365 14 104 0 46483 39 0 0 1110 10 1120 40 0 0 1088 0 1088 41 0 0 428 0 428 மொத்தம் 27,38,085 1,144 8,805 11 27,48,045
தமிழகத்தில் இன்று 1,155 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 589 பேருக்கு பாதிப்பு: 603 பேர் குணமடைந்தனர்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 20:33:00
சென்னை: தமிழகத்தில் இன்று 1,155 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,48,045. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,62,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,03,799. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 74,83,722 பேர் வந்துள்ளனர். சென்னையில் 589 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 578 பேருக்குத் தொற்று உள்ளது. * தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 252 தனியார் ஆய்வகங்கள் என 321 ஆய்வகங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு: * தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 6,929. * மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை5,65,04,639. * இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,04,414. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,48,045. * இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,155. . * சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 589. * சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 2403. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,03,987 பேர். பெண்கள் 11,44,020 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர். * தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 665 பேர். பெண்கள் 490 பேர். * இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 603 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27,03,799 பேர். * இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,776 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8652. பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 11 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் யாருமில்லை. இன்று மாநிலம் முழுவதும் 38039 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25718 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8190 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு; இன்றைய நிலவரம்: * மொத்த பாதிப்பு: 118. * டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 66. * சிகிச்சையில் உள்ளோர்: 52. இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது; திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 20:13:00
சென்னை: நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அன்றாட கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது; திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கெடுபிடிகள் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.882 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15.12.2021-ன்படி, 31.12.2021 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 31.12.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவு: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 27.12.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.1.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.1.2022 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும். 2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. 3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. 4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். 1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும். 2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும். 3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். 4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park / Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். 6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். 7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 10) பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும். 11) மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 12) திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் (Multiplex/Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 13) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். 14) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். 15) அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இவ்வாறாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிர்வாகிகளை விடுவிக்கவும் : எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்
ந.சரவணன்
திருப்பத்தூர்
2021-12-31 17:21:00
திருப்பத்தூர்: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கட்சி நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலான அதிமுகவினர் திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனம் மற்றும் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 17-ம் தேதி முதல் அவர் தலைமறைவாக உள்ளார். அவரைக் கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ராஜேந்திர பாலாஜியிடம் நெருக்கமாக உள்ள அதிமுகவினரின் செல்போன் எண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டபோது, திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை மற்றும் திருப்பத்தூர் அடுத்த அக்ரகாரத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் விக்னேஸ்வரன் ஆகிய 2 பேரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து சிவகாசி டிஎஸ்பி பிரபாகர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கடந்த 28-ம் தேதி 2 பேரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற அதிமுக நிர்வாகிகள் இருவரும் எங்கே உள்ளனர்? அவர்களின் தற்போதைய நிலை என்ன ? கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு காவல்துறை சார்பில் எந்த ஒரு பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தமிழக காவல்துறையினரின் இத்தகைய செயலைக் கண்டித்தும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அதிமுக நிர்வாகிகள் இருவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பத்துார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், தனிப்படை காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் உள்பட அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள்: மழைக்கு தாங்காத சென்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 17:00:00
சென்னை: "10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள்" என்று மழைக்கு தாங்காத சென்னை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சி காலத்தின் செயல்பாடுகளை விமர்சித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று பிற்பகல் 12.20 மணி அளவில் கிழக்கு திசையில் கருமேகங்கள் திரண்டு மாநகரப் பகுதிக்குள் நுழைந்து திடீரென கனமழை கொட்டியது. அப்போது கடும் காற்றும் வீசியது. மாலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், 4 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்றும் சென்னையில் கனமழை நீடித்துள்ளது. தற்போது சென்னை சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், திடீர் மழைக்கு வெள்ளமென தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சில நிகழ்ச்சிகளுக்காக திருச்சி சென்றுவிட்டு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். ஆழ்வார்ப்பேட்டை பகுதி சாலைகளில் நடைபெற்றும் வரும் மழைநீர் அகற்றும் பணியை ஆய்வு செய்தபிறகு முதல்வர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்பாராத விதமாக இவ்வளவு பெரிய மழை பெய்துள்ளது... "வானிலை மையத்தினர் வழக்கமாக முன்னெச்சரிக்கைக் கொடுப்பார்கள். இம்முறை அவர்களே ஏமாந்துள்ளனர். அதற்கு அவர்கள் வருத்தமும் தெரிவித்துளளனர். எதிர்பாராமல் பேய்மழையாய் கொட்டிய மழைநீர் அங்கங்கே தேங்கியுள்ளன. நான் திருச்சியிலிருந்து வந்த உடனே மாநகராட்சி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள war room-ல் சென்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர்களிடம் கலந்து பேசினேன். தற்போது நகரில் தேங்கியுள்ள நீரை அகற்ற அங்கே பம்ப்செட் அமைத்து நீர் அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அவர்கள் பணி திருப்தியாக இருக்கிறது. நிச்சயமாக இன்றைக்குள்ளாக அனைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும். சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்றைக்குள் நிறைவடையும்." திடீர் மழை எனும்போது அதை அறிவிக்கமுடியாத நிலையில் வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை கருவியில் ஏதோ பிரச்சினை உள்ளது. அதை மாற்ற மத்திய அரசுக்கு ஏதேனும் கோரிக்கை வைக்கிறீர்களா? "அது அவர்கள் செய்ய வேண்டிய பணி. இருந்தாலும் நீங்கள் சொன்னதற்காக நானும் அவர்களிடம் நினைவுபடுத்துவேன்." மீண்டும் மீண்டும் தேங்கியுள்ள இடத்திலேயே நீர் தேங்கியுள்ளது. திட்டமிடாததுதான் காரணமா? "10 ஆண்டுகளாக குட்டிச்சுவாக்கி வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஏற்கெனவே கூறியுள்ளோம். அதையெல்லாம் விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. தற்போது உள்ள பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். அதுதான் இப்போது, அடுத்த மழைக்காலம் வருவதற்குள் இப்பிரச்சினைக்கெல்லாம் நிச்சயம் தீர்வுகாணப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை: அண்ணாமலை
ந.முருகவேல்
கள்ளக்குறிச்சி
2021-12-31 16:01:00
கள்ளக்குறிச்சி: "பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புறத் தேர்தலில் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. பேரிடர் மேலாண்மை நிதி, பேரிடர் காலத்திற்கு முன்னரே மத்திய அரசு ஒதுக்கும். அதை விஷயத்தை மாநில அரசுகள் கூறுவதில்லை. பேரிடருக்குப் பின் மத்தியக் குழு ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். மேலும் தற்போது ஆளும் திமுக அரசானது பாதிக்கபட்ட விவசாய நிலங்கள் குறித்து முறையாக பதிவு செய்திருந்தால் கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரபெற்றிருக்கும். நடைபெறவுள்ள பட்ஜட் கூட்டத் தொடரிலும் தமிழகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் திட்டங்கள் அமையும். ஆண்டுதோறும் சிறப்பாக மத்திய பட்ஜட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக, கடந்த 7 வருடங்களில் மத்திய பட்ஜெட்டில் ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. பெட்ரோல் விலையில் மாநில அரசு வரி விதிப்பை குறைக்க பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.4-ம் குறைப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை" என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இலங்கையில் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்
செய்திப்பிரிவு
மதுரை
2021-12-31 15:54:00
மதுரை: இலங்கையில் கைதான மீனவர்களை பொங்கலுக்கு முன்பு இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 19-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேர், 12 நாட்கள் ஆகியும் விடுவிக்கப்படாத நிலையே தொடர்வது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் மத்திய அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவலே பெறப்பட்டு வருகிறது. ஆனால், இது கடலோர மீனவர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தபோது, இலங்கை கடற்படை கைது செய்த 68 தமிழக மீனவர்கள் மீட்பு நடவடிக்கைகள், புத்தாண்டுக்கு முன்பு மீனவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வகையில் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், மீனவர்களை பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் இன்று தெரிவித்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரையும் விடுதலை செய்யக் கோரி ராமநாதபுரம் மோர்பண்ணையை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் 68 மீனவர்களின் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளித்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களில் 2 பேர் சிறுவர்கள். மீனவர்கள் அவர்களின் குடும்பத்துடன் தொலைபேசியில் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 68 மீனவர்களையும் விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், ''கைதானவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றால், அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மீனவர்களை அவர்களின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச செய்வதற்கான நடவடிக்கை பாராட்டுக்குரியது. மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்பு மீனவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது'' என்றனர். பின்னர் அடுத்த விசாரணையை ஜன.7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்தியாவை இலங்கை பொருட்படுத்துவது இல்லையோ? - மீனவர் பிரச்சினையில் அன்புமணி சந்தேகம்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 15:44:00
சென்னை: "இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், "இலங்கைக்கு ஆயிரமாயிரம் உதவிகளை செய்தாலும் இந்தியாவை இலங்கை பொருட்படுத்துவதில்லையோ?” என்று அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 43 பேரின் நீதிமன்றக் காவலை வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. மீதமுள்ள 26 மீனவர்களின் காவலும் நாளைக்குள் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மீனவர்களின் விடுதலையை எதிர்பார்த்த நிலையில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் கடந்த டிசம்பர் 18ம் தேதி வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளே புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 43 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. அதேபோல் மீதமுள்ள மீனவர்களின் காவலும் நாளைக்குள் அடுத்தடுத்து நீட்டிக்கப்படவுள்ளன. இது ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளன; மீனவர் குடும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன் பாட்டாளி மக்கள் கட்சிதான் அதைக் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன்பின் கடந்த 22-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நான் டெல்லியில் சந்தித்து, இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமைமீறல் குறித்தும், அவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினேன். அவரும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனால் மீனவர்கள் விரைவாக வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இந்திய அரசு கேட்டுக் கொண்ட பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்காமல் காவலை நீட்டித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கைக்கு ஆயிரமாயிரம் உதவிகளை செய்தாலும் இந்தியாவை இலங்கை பொருட்படுத்துவதில்லையோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழலில் வரும் 10ம் தேதி குஜராத்தில் தொடங்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இலங்கை நிதி அமைச்சரும், அதிபர் கோத்தபாயாவின் சகோதரருமான பசில் ராஜபக்சே சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருக்கிறார். இந்தியாவின் வேண்டுகோள்களை இலங்கை கிள்ளுக்கீரையாக கருதும் போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்யும்படி இலங்கையிடம் கண்டிப்பான குரலில் இந்தியா கூற வேண்டும். இலங்கைப் படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வேதனையில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டிய ஆங்கிலப் புத்தாண்டு நாள் அவர்களைப் பொறுத்தவரை வேதனையான நாளாக மாறியிருக்கிறது. ஜனவரி 13-ம் நாளுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்த பிறகாவது அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியவில்லை. அவ்வாறு விடுதலை செய்யப்படாவிட்டால் அவர்கள் பொங்கல் திருநாளைக் கூட கொண்டாட முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இடம் கொடுத்திவிடக் கூடாது. தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் சொந்த ஊர் திரும்பி தமிழர் திருநாளைக் கொண்டாட வசதியாக மீனவர்கள் 69 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; இதுவரை பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 75 மீன்பிடி விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா உறுதியாக தெரிவிக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தேங்கியுள்ள மழைநீர் 6 - 7 மணி நேரத்துக்குள் வெளியேறிவிடும்: ககன் சிங் தீப் பேடி
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 15:23:00
சென்னை: "சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் 6 முதல் 7 மணி நேரத்துக்குள் வெளியேறிவிடும்" என்று மாநகராட்சி ஆணையர் ககன் சிங் தீப் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று பிற்பகல் 12.20 மணி அளவில் கிழக்கு திசையில் கருமேகங்கள் திரண்டு மாநகரப் பகுதிக்குள் நுழைந்து திடீரென கனமழை கொட்டியது. அப்போது கடும் காற்றும் வீசியது. மாலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், 4 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். பல்வேறு சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கியதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய மாநகரப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “சென்னையில் நேற்று பெய்த தொடர் மழையால் 156 இடங்களில் மழை தண்னீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதலே மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் பிரதான சாலைகளில் தேங்கிய மழை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. அவையும் 6 - 7 மணி நேரத்துக்குள் வெளியேறிவிடும். கடந்த முறைபோல் இருக்காது” என்று தெரிவித்தார். இதனிடையே, இன்றும் சென்னையில் கனமழை கொட்டத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான அப்டேட் > சென்னையில் மீண்டும் கனமழை தொடங்கியது; நாளைக்கும் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பேரிடரைக் கடந்து யாவரும் நலன்பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 14:56:00
சென்னை: ”உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "இனிமை சூழ்ந்து - இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. அந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது. நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன். நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் உள்ளிட்ட 7 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 14:20:00
சென்னை: திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழனி ஆகிய இடங்களிலுள்ள திருக்கோயில்களில் அமைக்கப்பட்ட மருத்துவ மையங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "முதல்வர் ஸ்டாலின் இன்று (31.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் (மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம்) ஆகிய 7 கோயில்களில் மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் என 7 கோயில்களில் அமைக்கப்பட்ட மருத்துவ மையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும். இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம், வீதம் 10 கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்." இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையில் எலி கடித்த பெண்ணுக்கு  ரூ.25 ஆயிரம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு
கி.மகாராஜன்
மனு
2021-12-31 14:15:00
மதுரையில் எலி கடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கிட உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். மதுரையைச் சேர்ந்த முத்துலட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் 2014-ல் தாக்கல் செய்த மனு: மதுரையில் 19.1.2014-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயமடைந்தார். அதற்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள் நோயாளியாக சிகிச்சை பெற்றார். அப்போது மகனுக்கு துணையாக நானும் மருத்துவமனையில் இருந்தேன். மகன் படுக்கை அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது எனது இடது முழங்காலில் எலி கடித்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறையாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில்லை. இதனால் எலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடும் போது, மனுதாரர் ''ஜனவரி 23-ல் தன்னை எலி கடித்ததாக கூறுகிறார். அப்போது அவர் மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை. ஜன. 31-ம் தேதி தான் சிகிச்சை பெற்றுள்ளார். மனுதாரர் உடலில் எலி கடித்ததற்கான காயம் இல்லை. மருத்துவமனை சுகாதாரத்தை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனைக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி நிறைவேற்றி வருகிறது'' என்றார். இதையடுத்து, ''மருத்துவமனையில் தூய்மை மற்றும் சுகாதாரம் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. எதிர்பாரா விபத்து நிகழும் போது இழப்பீடு வழங்க வேண்டும். இதனால் எலி கடிக்கு ஆளான மனுதாரர் இழப்பீடு பெற தகுதியானவர். மனுதாரருக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலர் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார்.
மோசடி நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமா? - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி
செய்திப்பிரிவு
கூறியதாவது
2021-12-31 13:57:00
திண்டுக்கல் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் உண்மைக்கு மாறானதை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. மோசடி செய்தவர்கள், விதிமுறைக்கு உட்படாதவர்கள் மட்டுமே கடன் தள்ளுபடி வழங்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இது தொடர்பாக திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "நகைக்கடன் தள்ளுபடியை குறைவாக கொடுத்துவிட்டது போல் எதிர்க்கட்சிகள் சித்தரிக்க முயல்கின்றன. இது உண்மைக்கு மாறானது. கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக முதல்வர் நகைக்கடன் தள்ளுபடியை செய்துள்ளார். நகைக்கடன் தள்ளுபடி பெறவேண்டும் என்ற உள்நோக்கத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை வாங்கிச் சென்று நகை அடகு கடைக்காரர்கள் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தன்லால் என்பவர் 672 கணக்குகளில் நகைக்கடன் வாங்கியுள்ளார். அனைத்தும் ஐந்து பவுனுக்கு கீழே உள்ளவை. இவருக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? இவர் மக்களின் பணத்தை திருட முயற்சித்துள்ளார். அதை சரி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறாரா? நகையே இல்லாமல் வெறும் பொட்டலத்தை மட்டும் பையில் வைத்து தூத்துக்குடி மாவட்டம் குரூம்பூரில் 2 கோடி ரூபாய் அளவுக்கு சிலர் கடன் பெற்றுள்ளனர். சில இடங்களில் கவரிங் நகைகளை வைத்தும் கடன் வாங்கியுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 48,84,726 நகைக்கடன்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 7,65,738 நகைக்கடன்கள் தனி நபர்கள் 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை, 21,03,441 நகைக்கடன்கள் அனைத்தும் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றவர்கள் சேர்ந்து 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை, 2,20,748 நகைக்கடன்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர்களை பயன்படுத்தி அடகு கடைக்காரர்கள் முறைகேடாக பெற்றவை, 2,13,887 நகைக்கடன்கள் ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் பலன் அடைந்தவர்கள். 2,33,879 நகைக்கடன்கள் போலி நகை, நகைகளே இல்லாத காலி பொட்டலங்கள் முதலான விதிமீறல்கள் என கண்டறியப்பட்டவை. இவை அனைத்தும் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியில்லாதவையாகும். 13,47,033 நகைக் கடன்கள் மட்டுமே தற்போது தள்ளுபடிக்கு தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளன. நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, 40 கிராமுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 22,52,226 ஆகும். இவர்களில் தற்போது தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் 10,18,066 பேர்" இவ்வாறு அவர் கூறினார். மீண்டும் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் மேலும் கூறுகையில், நிராகரிக்கப்பட்ட பட்டியலில் தகுதியான பயனாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும். அதற்கான உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகினால், அவர்கள் ஆய்வு செய்து தகுதியிருப்பின் நகைக்கடன் தள்ளுபடி பெற பரிந்துரைப்பார்கள். ஏழை மக்கள் பயடைய வேண்டும் என்பதுதான் நகைக்கடன் தள்ளுபடியின் நோக்கம் என்று கூறினார்.
விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணியைக் கைவிடுக: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 13:44:00
சென்னை: விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணியைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அதிமுக ஆட்சிக் காலத்தில் மீட்டர் பொருத்தப்பட்டபோது விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்தப் பணி நிறுத்தப்பட்டது. அப்போது திமுகவும் அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது. மீட்டர் பொருத்துவது எதிர்காலத்தில் இலவச மின்சாரம் என்பது பறிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கம் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. மீட்டர் பொருத்தப்பட்டாலும், இலவச மின்சாரம் தொடரும் என்று அமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கெனவே, மத்திய பாஜக அரசு மின்சாரத் திருத்த மசோதா 2020-ன் மூலம் இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் என்பதை எல்லாம் ரத்து செய்து அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மீட்டர் பொருத்துவது அந்த நிலையை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. கட்டணம் வசூலிக்கப்படாது என்றால் எதற்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து மீட்டர் பொருத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. எனவே, விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கிடும் வகையில், விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையைக் கைவிட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். அதேபோல், மேலும் மேலும் பொதுமக்கள் மீது கடும் நிதிச் சுமையை ஏற்றும் வகையில் மின்சார வாரியம் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 2017-ம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு வசூலிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது" என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீண்டும் கனமழை தொடங்கியது; நாளைக்கும் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 13:37:00
சென்னை: சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று எதிர்பாராத வகையில் பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று பிற்பகல் 12.20 மணி அளவில் கிழக்கு திசையில் கருமேகங்கள் திரண்டு மாநகரப் பகுதிக்குள் நுழைந்து திடீரென கனமழை கொட்டியது. அப்போது கடும் காற்றும் வீசியது. மாலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், 4 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.பல்வேறு சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கியதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய மாநகரப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: “தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர்‌ உயரத்தில்‌) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய அதி கனமழையும்‌ பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, சென்னை, திருவள்ளூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யும். உள்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை கடலோர மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, சென்னை, திருவள்ளூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும் பெய்யும். உள்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஜனவரி 2ஆம் தேதி கடலோர மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஜனவரி 3ஆம் தேதி தென்‌ தமிழ்நாட்டில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. 4ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும்‌. 31.12.2021 ,01.01.2022: குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இப்பகுதிகளுக்குச் செல்லும்‌ மீனவர்கள்‌ எச்சரிகையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌”. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு: வண்டலூர் பூங்காவில் கரோனா கட்டுப்பாடுகள்
செய்திப்பிரிவு
சென்னை
2021-12-31 13:18:00
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா வருவோருக்காக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதியில்லை என்பன உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிவரை கோயில்களைத் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பைக் ரேஸ், மது அருந்தி பைக் ஓட்டுவது போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்குத் தடை உள்ளிட்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இன்று நள்ளிரவு நட்சத்திர ஓட்டல்கள் கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களுக்காக பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. புத்தாண்டு தினமான நாளை (சனிக்கிழமை) ஏராளமான மக்கள் அங்கு பார்வையிட வருவார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழங்கிய பல்வேறு அறிவுரைகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புத்தாண்டில், உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காகப் பின்வரும் கோவிட் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1) பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. 2) பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. 3) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பூங்காவினுள் பல்வேறு இடங்களில் கை கழுவும் வசதிகள் மற்றும் தானியங்கி கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. 4) பார்வையாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக 2 மீட்டர் தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 5) முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கிக் கொள்ளலாம். 6) முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழையும்போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றது. பார்வையாளர்கள் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பலகை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது. பார்வையாளர்களால் கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் மற்றும் கண்காணிக்கவும் துணை இயக்குநர் (அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா) தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தாண்டில் அனைவருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான பூங்கா அனுபவத்தைப் பெற வாழ்த்துகிறது''. இவ்வாறு அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் தெரிவித்துள்ளார்.